Connect Us

 

சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு. சிம்பு படங்களில் சந்தானம்தான் இதுவரை நடித்து வந்தார். முதன் முறையாக டைரக்டர் பாண்டிராஜ் தான் இயக்கும் இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன், சூரியை இணைத்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு லிப் லாக் லவ்வராக இருந்த சிம்புவும், நயன்தாராவும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் சிம்புவை, சூரி கலாய்க்கும் காட்சிகள் நிறைய இருக்கிறதாம். ஒரு உதாரணம்...

சிம்பு: என்னோட காதல் நல்லபடியா நிறைவேறுமா?

சூரி: எல்லோருக்கும் லவ்வுல பிரச்னை இருக்கும், உனக்கு பிரச்னையில லவ் இருக்கு?

சிம்பு: சகோ அவளை நான் லவ் பண்ணப்போறேன்

சூரி: எத்தனை நாளைக்கு-?

இதே மாதிரி நயன்தாராவையும் சூரி விட்டு வைக்கலையாம். உதாரணத்துக்கு சில வசனங்கள்...

நயன்தாரா: அவர் மேல எனக்கு லவ் வந்திருச்சு..?

சூரி: அப்புறம் என்ன பச்சை குத்தியிருக்குறத அழிச்சிட வேண்டியதானே-?

நயன்தாரா: லவ்வுன்னா என்ன?

சூரி: ஒருத்தர காதலிச்சாத்தான் அதுக்கு பேரு லவ்வு. ஒரு டஜன் பேரை காதலிச்சா அதுக்கு பேரு லொள்ளு.

இப்படி படம் முழுக்க சிம்புவையும், நயன்தாராவையும் வாரியிருக்காராம் சூரி. இருவருமே அதை புரிந்து ஜாலியாக நடிச்சிருக்காங்களாம். நயன்தாரா இப்படியே ஜாலி மூடில் இருந்தால் படம் ரிலீசாகும்போது இந்த காட்சிகள் படத்தில் இருக்கும் என்கிறார்கள் யூனிட் ஆட்கள்.

Post a Comment

 
Top