Connect Us

 


தல ஒன்று! வில்லன் இரண்டு!

தல ஒன்று! வில்லன் இரண்டு !!!!

அஜித் - கெளதம் மேனன் படத்தினைப் பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. முக்கியமாக இசையமைப்பாளர் மற்றும் வில்லனைப் பற்றிய செய்திகள் இதில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கின்றன.
அஜித் - கெளதம் மேனன் - அனுஷ்கா இணையும் படத்தினை ஏ.என்.ரத்னம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். மேலும் இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று விசாரித்த போது பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.
அஜித் - கெளதம் மேனன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இப்படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி தவறானது. அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்.
வில்லன்கள் விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை அவர்கள் வில்லன்களாக நடித்திருக்கக் கூடாது, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறது படக்குழு.

படத்தின் வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.இதுவரை நாயகனாக நடித்து வந்தவர்கள், அஜித் படம் மற்றும் கதையில் வில்லன்களின் பங்கு என்ன என்பதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
சிம்பு - கெளதம் மேனன் இணைந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த டான் மெக்கார்தர்(DanMacarthur), அஜித் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முன்னர் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார் என்ற பேச்சுகள் நிலவி வந்தன. ஆனால், எஸ்.ஆர்.கதிரிடம் இது குறித்து யாருமே பேசவில்லையாம்.
அஜித் - அனுஷ்கா - அரவிந்த் சாமி - அருண்விஜய் என ஒரு புதிய கூட்டணியுடன் அதிரடியான ஒரு போலீஸ் ஆக்ஷன் கதைக்கு திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.
Source : thehindu

Post a Comment

 
Top