Connect Us

 


எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா நடித்த வெள்ளக்கார துரை படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்று அளித்துள்ளது. 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் வெள்ளக்கார துரை.
காதலும் நகைச்சுவையும் கலந்த இந்த படம் இம்மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு "யு" சான்றிதழ் அளித்துள்ளனர். டி இமான் இசையில் மனம் கொதித்தப் பறவை, தேசிங்குராஜா படங்களின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் போல, இந்த படத்தின் பாடல்களுக்கும் கிடைத்துள்ளது.

Post a Comment

 
Top