Connect Us

 





திரு திரு துறு துறு படத்தில் அறிமுகமானவர் பெங்களூரைச் சேர்ந்த ரூபா மஞ்சரி. சிவப்பு படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். அதில் இலங்கை தமிழ் அகதியாக நடித்துள்ளார் இதுபற்றி ரூபா கூறியதாது: இயக்குனர் சத்யசிவா நான் இலங்கை தமிழ் பெண்போன்று இருப்பதாலும் அவர்களைப்போல சுருட்டை தலை இருப்பதாலும் என்னை படத்துக்கு தேர்வு செய்தார். ராமேஸ்வரத்தில் ஷூட்டிங் நடந்தபோது உண்மையிலேயே இலங்கை தமிழ் அகதிகள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து வேதனைப்பட்டேன். இயக்குனர் நீ நடிக்கவே வேண்டாம் சும்மா வந்து சென்றாலே போதும் என்றார். நானும் அப்படியே செய்தேன். கிளாமரான ரோல்களில் நடித்து விட்டு அழுக்கான உடையுடன் நடித்தது வித்தியாசனமான அனுபவமாக இருந்தது. இலங்கை தமிழ் பெண் கேரக்டரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. 

இந்த கேரக்டருக்கு எனக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்கிறார்கள். படத்தை பார்த்தவர்கள் இப்போது என்னை பாராட்டுகிறார்கள். அதே மாதிரி படம் பார்க்கும் ரசிகர்களும் என்னை பாராட்டினாலே போதும். என்கிறார் ரூபா.

Post a Comment

 
Top