Connect Us

 




அருந்ததியை மிஞ்சும் வகையில் அனுஷ்கா நடித்து வரும் அதிரடி படங்கள் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி. இதில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பாகுபாலி படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதையடுத்து, கடந்த சில மாதங்களாக தான் கடின பயிற்சி எடுத்து வந்த வாள் சண்டையில் தற்போது ஈடுபட்டுள்ளார் அனுஷ்கா.

இந்தநிலையில், கர்நாடகத்தில் உள்ள ஜைன மத அமைப்பினர், ஏற்கனவே பாகுபாலி டைட்டீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு பாகுபாலி டீம் செவி சாய்க்காததால் இப்போது இன்னும் எதிர்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர். கூடவே, இந்த டைட்டீலை வைப்பதற்கு தடை கோரியும் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்களாம்.

அதில், பாகுபாலி என்பது ஒரு ஜைன மத துறவியின் பெயர். அவர் அன்பே உருவானவர். அமைதியை நேசித்தவர். ஆனால், அப்படிப்பட்டவரின் பெயரில் ஒரு ரத்தக்களறி படத்தை எடுக்கிறார்கள். படம் முழுக்க ஆதி காலத்தில் நடந்த யுத்தமே பெரும் பங்கு வகிக்கிறதாம். அதில் ஆயிரக்கணக்கானோர்களை வெட்டி சாய்க்கிறார்களாம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு படத்துக்கு சாந்த சொரூபியான பாகுபாலியின் பெயரை வைப்பது, அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்களாம்.

இதனால் இந்த பிரச்னை படம் திரைக்கு வரும்போது இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை புரிந்து கொண்ட பட இயக்குனர் ராஜமவுலி, இப்போது பாகுபாலி டைட்டீலையே மாற்றிவிட்டு, வேறு டைட்டீல் வைக்க முடிவு செய்திருக்கிறாராம். இதையடுத்து, ராஜமவுலி மட்டுமின்றி, பிரபாஸ், அனுஷ்கா ஆகியோர் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

Post a Comment

 
Top