Connect Us

 

இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் 66 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களது 81 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடுவதற்காக அவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Post a Comment

 
Top